நாடு முழுவதும் கொரோனா காரணமாக போக்குவரத்துகளில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இயக்கப்பட்டன. அதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் மீண்டும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 192 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவலால் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ரயில்களில் பயணிக்கும் நிலை இருந்து வந்தது. தற்போது வருகின்ற பத்தாம் தேதி முதல் இயக்கப்படும் 192 எக்ஸ்பிரஸ் ரயில்கள் படிப்படியாக மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.