Categories
சினிமா தமிழ் சினிமா

“1947 ஆகஸ்ட் 16” நடிகர்‌ சிம்பு வெளியிட்ட டீசர்…. இணையத்தில் செம வைரல்….!!!!

கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் அஜித் நடித்த தீனா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர் முருகதாஸ். அதன் பிறகு ரமணா, கத்தி, ரஜினி, துப்பாக்கி, சர்க்கார் உள்ளிட்ட பல ஹிட் படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் ஏ.ஆர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக தர்பார் என்ற திரைப்படம் வெளியானது. இவர் ஏ.ஆர் முருகதாஸ் ப்ரோடக்ஷன் சென்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இவருடைய தயாரிப்பில் ரிலீஸ் ஆன ரங்கூன், ராஜா ராணி, மான் கராத்தே மற்றும் எங்கேயும் எப்போதும் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள 1947-ஆகஸ்ட் 16 என்ற திரைப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை என்.எஸ் பொன் குமார் இயக்கியுள்ளார். மேலும் 1947 ஆகஸ்ட் 16 திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |