Categories
கதைகள் பல்சுவை

“1947,ஆகஸ்ட் 15” மெய்சிலிர்க்க வைக்கும் சுதந்திர தின வரலாறு..!!

சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் குறித்தும், சுதந்திரம் கிடைத்தது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக காண்போம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் முதன்முதலாக வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்காக கடல்வழியாக நுழைந்தனர். வாஸ்கோடகாமா என்பவர் கடல்வழி கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். அவரே கடல் வழியாக இந்தியாவிற்குள் செல்வதற்காக  வழிவகை செய்தவர். இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு கடல்வழி பாதைகளை ஏற்படுத்தித் தந்தார். பின் ஐரோப்பியர்கள் உடன் சேர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்தனர்.

Image result for ஆங்கிலேயர்கள்  கடல்வழிப்பயணம்

இதில் பெரும் வெற்றி பெற்று ஆங்கிலேயர்களின் கை ஓங்க ஆரம்பித்தது பின் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை உருவாக்கினர். இதனை இந்தியாவில் முகலாயப் பேரரசர் ஜஹாங்கிர் அவரது உதவியுடன் ஆரம்பித்தனர். இதனால் இந்தியருக்கும் அதிக வேலை வாய்ப்பு கிடைத்தது. முதலில் நன்றாக தெரிந்த இத்திட்டம் நாளுக்குநாள் மக்களை அடிமைப்படுத்தியது. மேலும் குறுநில அரசர்களால் சரியாக வரிகட்ட முடியாமல் போக பல்வேறு போராட்டங்கள் போர்கள் இந்தியாவிற்குள் ஆங்கிலேயர்களை எதிர்த்து வெடித்தது.

Image result for கிழக்கிந்திய கம்பெனி

இந்நிலையில் பகதூர்ஷா என்பவரது தலைமையில் சிப்பாய் கலகம் என்ற ஒன்று  இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே ஆங்கிலேயர்களுக்கு எதிராக குரல் கொடுத்த முதல் கழகம் ஆகும். இதனை ஆரம்பித்த பகதூர்சாவே  இதற்கு  தளபதியாகத் திகழ்ந்தார். சிப்பாய் கலகம் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி வந்த அதே வேளையில் முதல் உலகப்போர் நடைபெற்றது. இப்போரில் முகலாயப் பேரரசின் ஆட்சி முற்றிலும் கவிழ்க்கப்பட்டு ஆங்கிலேயர்களின் கைகள்  இந்தியாவில் மேலோங்கியது. பின் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் வரி முழுவதையும் இந்தியாவிற்கு அளிக்காமல் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அளித்து வந்தனர்.

Image result for சிப்பாய் கழகம்

இதனால் இந்திய மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து பொருளாதாரத்தில் பின்தங்கி தவித்தனர். பின் தாதாபாய் என்பவர் இதற்கு முடிவு கட்டும் வகையில் கிழக்கிந்திய கூட்டமைப்பு கம்பெனி என்ற ஒன்றை உருவாக்கினார். இதன் மூலம் இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என்று மக்கள் மத்தியில் சூளுரைத்தார். இவ்வாறு ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் புரட்சி வெடிக்க மறுபுறம் டெல்லியில் 1877 ஆம் ஆண்டு மகாராணியாக விக்டோரியா அவர்கள் பதவி ஏற்கிறார்.

Related image

அதன்பின் allen ஹட்டோரி என்பவர் 1885இல் டிசம்பர் 25 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். இது மும்பையில் 77 பிரதிநிதிகள் முன்பு தொடங்கப்பட்டது. இதில் விவேகானந்தர், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட மிகப்பெரிய தேசிய தலைவர்கள் இருந்தனர். 1905 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சி என்ற ஒரு தத்துவத்தை கண்டுபிடித்து அதனை செயல்படுத்தினார். உதாரணமாக வங்காளப் பிரிவினையை கருத்தில் கொள்ளலாம்.

Image result for வங்காள பிரிவினை

இதே தத்துவத்தை கொண்டு காங்கிரஸ் கட்சியையும் இரண்டாகப் பிரித்தனர். அதன்படி தேசியவாதம், அடிப்படைவாதம் என காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது. தொடர்ச்சியாக போராட்டம் செய்ததால் பால கங்காதர திலகர் ஆங்கிலேயர்களால்  1911 இல் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து ரவுலட் சட்டம், கருப்புச் சட்டம் என்ற சட்டங்களை 1918 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தனர்.

Image result for திலகர் சிதம்பரனார் கைது

இதன் மூலம் சுதந்திர பத்திரிக்கைகளை முடக்கம் செய்தல், அரசியல் கொள்கைகளை திடீரென மாற்றுதல், சாலையில் சாதாரணமாக அரசை எதிர்த்து பேசினாலே ராஜ துரோக வழக்கு உள்ளிட்ட சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விட ஆரம்பித்தனர். ஆங்கிலேயர்கள் 1919இல் மிகப்பெரிய சர்வாதிகார கொடுமையாக ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அப்போதைய பஞ்சாப் ஆங்கிலேய படை தளபதி ஜெனரல் டயர் தான். இந்த  படுகொலைக்குப் பின் ஒன்று திரண்ட மக்கள் 1920 ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களை நடத்தினர்.

Image result for ஜாலியன் வாலாபாக் படுகொலை

அப்பொழுதுதான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கங்களும் தோன்ற ஆரம்பித்தன. பின் பல்வேறு தொழிலாளர் இயக்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் மூலம் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு சுதந்திரப் போராட்டங்களை தொழிற் சங்கங்கள் மூலம் முன்னெடுத்து கொண்டு சென்றனர். இது இந்தியாவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் இரண்டு விதமாக ஆங்கிலேயர்களை துரத்தி அடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஒன்று காந்தி வழியில் அகிம்சை மூலம் வெளியேற்றுவது, மற்றொன்று பகத்சிங் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் போல்  வன்முறை மூலம்  வெளியேற்றுவது போன்றவற்றை கையாண்டனர்.

Image result for அகிம்சை வன்முறை

இந்நிலையில் 1929 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பகத்சிங் மற்றும் ராஜகுரு சுகதேவ் ஆகியோர் பாராளுமன்றத்தில் குண்டு வீசினர். இதனை எதிர்த்து கடுமையாக காந்தியடிகள் விமர்சனம் செய்தார். வன்முறை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்று கூறிய அவர், உப்புச் சத்தியாகிரகம், தண்டியாத்திரை, உள்ளிட்ட அகிம்சைப் போராட்டங்களை 1930களில் மேற்கொண்டார். இது நாடு முழுவதும் பேசப்பட இந்தியா இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்திஜி கலந்து கொள்கிறார். ஆனால் இந்த மாநாடு காந்தி அவர்கள் எதிர்பார்த்த அளவில் பெரிதாக நடக்கவில்லை.

Image result for பகத்சிங் ராஜகுரு சுக்தேவ்

அதே சமயத்தில் தான் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். இதனைத் தொடர்ந்து  இரண்டாம் உலகப் போர் நடைபெற ஆரம்பித்த நிலையில், இந்திய ராணுவம் அதில் பெரும் பங்கு வகித்தது. இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை பயன்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் இரண்டையும்  பிரித்தனர். இந்திய ராணுவத்தை சுபாஷ் சந்திரபோஸ்  ஜப்பான் உதவியுடன் தனது  கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

Image result for நேதாஜி ராணுவ படை

இந்திய ராணுவம் பலம் வாய்ந்ததாக காணப்பட்டாலும், அடக்குமுறைகளை எதிர்த்து போரிட்டாலும் அறவழி போராட்டம் ஒன்றே இந்திய சுதந்திரத்திற்கு தீர்வாக அமைந்தது. இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக மௌண்ட்பேட்டன் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை இரண்டாகப் பிரித்தனர். ஒன்று இந்தியா என்னும் மதசார்பற்ற நாடு ,மற்றொன்று பாகிஸ்தான் என்ற முஸ்லிம் மக்களுக்கான நாடு என்று இரண்டாகப் பிரித்தனர். இச்சம்பவம் 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற்றது.

Image result for india pakistan independence day

அதன்படி ஆகஸ்ட் 14ஆம் தேதி பாகிஸ்தானுக்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கும் சுதந்திரம் கிடைத்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் பட்டேல் பதவி ஏற்றார். சுதந்திரத்திற்காக போராடிய பல்வேறு தியாகிகளை நினைவு கூறும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினமாக அனுசரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Categories

Tech |