முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே நெடுகுளா கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1969-ஆம் ஆண்டு முதல் படித்த அனைவரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அதன்பிறகு பழைய நண்பர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து உரையாடினர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். அதன்பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நன்கொடை மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்கினர். இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளியின் ஆசிரியர்கள், ஊர் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.