Categories
தேசிய செய்திகள்

1971-ல் இந்தியா-பாக் போரின் வெற்றியை நினைவுகூறும் இந்தியா …!!

1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றியை நினைவு கூறும் வகையில் கப்பலைத் தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்தது.

1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் படைகள் எந்தவித நிபந்தனையுமின்றி இந்தியாவிடம் சரணடைந்தது. இதன் விளைவாகவே வங்க தேசம் உருவானது. இந்த வரலாற்று நிகழ்வு நடந்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகின்றன. இப்போரில் இந்தியாவின் வெற்றியை நினைவு கூறும் வகையில் ”ஆபரேஷன் பைத்தான்” என்ற பெயரில் இந்திய கடற்படை ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. கப்பலைத் தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை கடற்படையின் போர்க்கப்பலில் ல் இருந்து ஏவப்பட்டது. இந்த ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இது தொடர்பான வீடியோ பதிவுகளை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |