Categories
அரசியல் மாநில செய்திகள்

1976தான் உதாரணம் உடன்பிறப்புகளே….! மிரட்டலும், உருட்டலும் வேணாம்… ஒரு போதும் அஞ்ச மாட்டோம் …!!

திமுக மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாது என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரு விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ்நாட்டுக்காக அதிமுக அரசு பேச ஆரம்பிச்சா ஊழல் வழக்குகளை கொண்டு வந்து இவர்களை முடக்கிடுவாங்க. அதனால்தான் அதிமுக பயந்து போய் கிடக்கு. இவங்க கிட்ட உண்மை இருந்தால், நேர்மை இருந்தால் மத்திய அரசு கிட்ட உரிமைக்காக போராட முடியும். ஆனால் அவர்களால் முடியல. ஏனென்றால் ஊழல் மூட்டைகளை எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும், அமைச்சர்களும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் சுமந்து கொண்டு இருக்கிற காரணத்தினால் நித்தமும் பயத்திலேயே நடுங்கிட்டே இருக்காங்க.

திமுக இத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் எந்த காலத்திலேயும் அஞ்சியது கிடையாது. 1976 ஆம் ஆண்டைவிட அதற்கு வேறு உதாரணம் நான் சொல்லனுமா.  ஆட்சியா? கொள்கையா? என்ற பிரச்சனை வந்தப்போ பதவி பரிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று கொள்கையை காத்து நின்றவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள். அவசரநிலை அறிவிக்கப்பட்டதுமே மறுநாளே கூட்டத்தைக் கூட்டி இது ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கக்கூடிய செயல் என்று சொல்லக்கூடிய துணிச்சல் நம்முடைய முதலமைச்சராக இருந்த கலைஞர்க்கு இருந்துச்சு.

அதே போன்ற சூழ்நிலைதான் 1991 ஆம் ஆண்டு ஏற்பட்டுச்சு. என்னவென்று உங்களுக்கு தெரியும் இலங்கை தமிழருக்கு  ஆதரவாக கலைஞர் இருந்தார். விடுதலைப் புலிகளை ஆதரித்தார். அப்படி என்று காரணம் காட்டி 1991 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் உடைய ஆட்சி கலைக்கப்பட்டது. 1989 90 காலகட்டத்தில் ஈழம்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளில் நம்முடைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் ஈடுபட்டார். விடுதலைப்புலிகளின் அமைப்பின் தலைவராக இருந்த பால சிங்கம் அவர்களும், யோகி அவர்களும் பலமுறை முதலமைச்சர் கலைஞரை சந்திக்க கோபாலபுரம் வீட்டிற்கு வந்தவர்கள்.

Categories

Tech |