பீகார் மாநிலத்தில் இதுவரை 198 சுகாதாரத்துறை அதிகாரிகள் பணிக்கு வருவதில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பணிக்கு வராததின் விளக்கத்தை கேட்டு அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம் -2005 மற்றும் தொற்று நோய் சட்டம் -1897 இன் கீழ் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை விளக்கி 3 நாட்களுக்குள் பதில் சமர்ப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கடமையில் இல்லாத நிலையில் காணப்பட்ட மாநிலத்தின் மற்ற 122 சுகாதார அதிகாரிகள் மீதும் பீகார் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 325 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள சுகாதார பணியாளர்கள் பணிக்கு வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.