தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அறிய தேர்வு எழுத விண்ணப்பித்து கட்டணம் செலுத்த அக்டோபர் 21ஆம் தேதி கடைசி நாள் என்று பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பல்வேறு தொழில்நுட்ப படிப்புகள் உள்ளடங்கியுள்ளது. அதில் ஏதேனும் ஒன்றில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பில் 40 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்பதற்கு மாணவ மாணவிகள் அனைவரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏனென்றால் இத்தகைய படிப்பில் ஏதேனும் ஒன்றை படித்து தேர்ச்சி பெற்ற உடன் வேலை பார்க்கும் தகுதி அவர்களுக்கு வந்து விடுகிறது. இவர்களுக்கு செய்முறை அடிப்படையில் கற்றல் இருந்தாலும் கடைசியில் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் எழுத்து தேர்வில் அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். அதனால் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கும் விதமாக சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், 1984 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்ற அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத அனுமதி வழங்கியுள்ளது. அத்தகைய தேர்விற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்துவதற்கு அக்டோபர் 21ஆம் தேதி கடைசி நாள். கட்டணம் செலுத்த தவறினால் அபராதம் 150 ரூபாய் சேர்த்து அக்டோபர் 23ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.