Categories
மாநில செய்திகள்

1995 க்கு பின் இந்த வருடம்… தீபாவளியன்று சூரிய கிரகணம்…!!!!!

2022 ஆம் வருடத்தின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் நிகழ உள்ளது.  இந்த நிலையில் சூரிய கிரகணம் தொடர்பான சில முக்கியமான விஷயங்களை நாம் தெரிந்து கொள்வோம். 27 வருடங்களுக்கு முன்பு அதாவது 1995இல் தீபாவளி நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது இது போன்ற சூழல் உருவாகியுள்ளது. லட்சுமி பூஜை கொண்டாடப்படுகின்ற அடுத்த தினம் சூரிய கிரகணம் ஏற்படுகின்ற காரணத்தால் அதற்கு அடுத்த நாள் கோவர்த்தன பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது நவராத்திரிக்கு பின் தீபாவளிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத அமாவாசை அன்று தீபாவளி பண்டிகை அன்று அன்னை மகாலட்சுமிக்கு பூஜை செய்வது விசேஷமானதாகும் இந்த வருடம் தீபாவளி அன்று லட்சுமி பூஜைக்கு அடுத்த நாள் சூரிய கிரகணம் ஏற்படுவதால் நள்ளிரவுக்கு பின் சூதகம் தொடங்கும் சூரிய கிரகத்தினால் லட்சுமி பூஜையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். சதுர்த்தசி யுத்த அமாவாசை அன்று தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இந்த ஐப்பசி மாதத்தில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது மேலும் அது நவம்பர் 8 ம் தேதி தீபாவளி அன்று நிகழ இருக்கின்றது.

அமாவாசை திதியில் மட்டுமே சூரிய கிரகணம் நிகழும் என்ற காரணத்தினால் தீபாவளியும் அமாவாசை அன்றுதான் நடைபெறும். அதனால் இந்த முறை தீபாவளியன்று இரவில் இருந்தே சூதகாலம் தொடங்குகிறது. இரவு 2:30 மணிக்கு அதாவது அக்டோபர் 24ஆம் தேதி என்று தொடங்கி அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை 4.22 வரை சூதகாலம் இருக்கிறது. மேலும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் ஓரளவு தெரியும் அக்டோபர் 25ஆம் தேதி மதியம் 2.29 மணிக்கு தொடங்கி மாலை 6:32 மணி வரை தொடர்கின்றது. இந்த சூரிய கிரகணம் சுமார் 4 மணி நேரம் 3 நிமிடங்கள் இருக்கிறது அந்த நேரத்தில் இறைவழிபாடு நன்மை தருகிறது.

Categories

Tech |