இன்று முதல் +1 மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வு களுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கொரோனா குறைந்த பிறகே பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று முதல் வழங்கப்படும் என்று அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.