அசாம் மாநிலத்தில் வெள்ள நிவாரண தொகையாக ரூபாய் 1 கோடியை வழங்கி நடிகர் அக்ஷய்குமார் உதவியுள்ளார்.
கடந்த ஜூலை மாத காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வந்ததால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் மும்பை, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் உதவுவதற்காக தொடர்ந்து நிவாரண தொகையை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், அசாம் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக நடிகர் அக்ஷய்குமார் ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கி உள்ளார். அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிதியுதவி வழங்கிய அக்ஷய் அசாம் மாநிலத்தின் உண்மையான நண்பன் என்று அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவால் நன்றி தெரிவித்துள்ளார்.