தெலுங்கானாவில் கொரோனா வருவதற்கு முன் படுக்கையை முன்பதிவு செய்யும் அவலம் நடைபெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணக்காரர்கள் சிலர் தங்களுக்கு கொரோனா வருவதற்கு முன்பாகவே மருத்துவமனை படுக்கைகளை முன் பதிவு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படுக்கைக்கு ஒரு நாள் ஒன்றுக்கு முன்பதிவு பணமாக ரூ 1.5 லட்சம் வரை கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சில மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆங்காங்கே ஊரடங்கு காரணமாக பல பொதுமக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர் .
ஆனால் செல்வந்தர்களோ பணத்தை இப்படி விரையம் செய்து வருகிறார்கள் என ஒருபுறம் சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வர, மறுபுறம் கொரோனாவால் படுக்கை வசதி இல்லை என்ற செய்திகள் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் இதுபோன்ற முன்பதிவுகள் தானா ? என்றும் கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இதுபோன்ற அவலங்கள் தனியார் மருத்துவமனைகளில் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.