Categories
தேசிய செய்திகள்

1stடும் நாங்க… Bestடும் நாங்க…. கெத்து காட்டும் ஸ்டாலின் அரசு…. ட்விட்டரை தெறிக்கவிடும் உப்பிக்கள்..!!

இந்தியா டுடே பத்திரிகை நடத்தும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியல்களில் தமிழ்நாடு தொடர்ந்து நான்காம் ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. பல்வேறு அரசு துறைகளில் செயல்பாடுகளை ஆராய்ந்து சிறப்பாக செயல்படும் மாநிலங்களை தேர்வு செய்து இந்தியா டுடே பத்திரிக்கை விருது வழங்கி வருகின்றது. இந்த பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 2,000 புள்ளிகளில் 1.235.1  புள்ளிகளைப் பெற்றுள்ளது. 1.235 புள்ளிகளைப் பெற்று இமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்திலும், 1.211.9 புள்ளிகளைப் பெற்று கேரளா  மூன்றாம் இடத்திலும் உள்ளது.

தமிழகம் இந்த ஆண்டும் முதலிடம் பெற்றதை தொடர்ந்து #No1TamilNadu என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இதில் திமுகவினர் பலரும் ஸ்டாலின் தலைமையிலான அரசு சாதனையை புகழ்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்

 

Categories

Tech |