Categories
மாநில செய்திகள்

1st டும் நாங்க… Best டும் நாங்க…. கெத்து காட்டும் ஸ்டாலின் அரசு…. பெருமிதம் கொள்ளும் தமிழ்நாடு ….!!!!

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியதற்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: “தமிழ்நாடுஅரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக துறை ஒன்றை உருவாக்கி நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது நம் அரசு.

திமுக அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு வழங்கப்படும் பராமரிப்பு தொகை 1500 காத்திருப்போர் பட்டியலில் உள்ள 9,173 தகுதியுள்ள அனைத்து நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கியதற்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக 3.12.2021 அன்று தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் உயர்வினை மேம்படுத்தும் வகையில் அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிக கவனம் செலுத்தி பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்து அவர்களின் வாழ்வு செழிக்க இந்த அரசு முனைப்போடு செயல்படும்” என்று அதில் கூறியுள்ளார் .

Categories

Tech |