Categories
உலக செய்திகள்

“மனவலிமை போதும்!”.. பார்வையற்ற நபர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை..!!

சீனாவில் வசிக்கும் Zhang Hong என்ற கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்திருக்கிறார்.

Zhang Hong  உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மூன்றாம் பார்வையற்றவர் ஆவார். மேலும் ஆசியாவில் முதல் பார்வையற்றவராக இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இவர் கடந்த மே 24-ஆம் தேதியன்று மலை ஏறும் வழிகாட்டிகள் மூவருடன் நேபாளத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

கடந்த வியாழக்கிழமை அன்று அடிவாரத்திற்கு வந்தடைந்துள்ளார். இவர் Chongqing என்ற நகரில் பிறந்துள்ளார். இவருக்கு 21 வயதில் glaucomaயினால் கண் பார்வை பறிபோனது. கடந்த 2001 ஆம் வருடத்தில், அமெரிக்காவை சேர்ந்த Erik Weihenmayer என்ற பார்வையற்றவர் எவரெஸ்டில் ஏறியதால், கவரப்பட்டுள்ளார்.

எனவே மலை வழிகாட்டி நண்பரான கியாங் ஜியின் என்பவரின் வழிகாட்டுதல்களுடன்  பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளியாக இருந்தாலும்  கண் பார்வை இல்லை என்றாலும், கால்கள் மற்றும் கைகள் இல்லாவிடிலும், சாதாரணமாக இருப்பவர்களும், சாதிக்க வலிமையான மனம் இருந்தால் மட்டும் போதும். பிறர் நம்மால் முடியாது என்று கருதும் செயலை எப்போதும் செய்து முடிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |