Categories
அரசியல் மாநில செய்திகள்

1st அதை படியுங்க… அமித் ஷாவே பரிந்துரைச்சு இருக்காரு… பாஜகவுக்கு துரை வைகோ பதிலடி…!!

இந்தி கொண்டு வருவது இந்தி பேசும் ”ஏ கிரேடு” மாநிலங்களுக்குத்தான் பொருந்தும். தமிழகம் சி கிரேடு மாநிலமாக உள்ளது. இதற்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது என்ற மத்திய அரசு கருத்துக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த துரை வைகோ, ஏ கிரேடு என்று சொல்லுவது.. முழுமையா இந்தி பேசுற மாநிலங்கள் தான் ஏ கிரேடு மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இந்தியை பயிற்று மொழியாக வைக்கணும்.

அந்த மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், எய்ம்ஸ்  இந்த மாதிரி மத்திய அரசு நிறுவனங்களில் இந்தியை கொண்டுவரணும்னு சொன்ன மாதிரி அண்ணாமலை சொல்றாங்க. ஆனால் அவங்களுடைய நோக்கம் படிப்படியாக இங்கிலீஷை எடுத்துட்டு,  முழுமையாக இந்தியை கொண்டு வரணும் என்கின்ற ஒரு முடிவோடு இருக்காங்க. தயவுசெய்து புதிய கல்விக் கொள்கை – 2022 அந்த புக்கை படிங்க. அந்த புத்தகத்தை படிச்சிட்டு தான் நான் சொல்றேன்.

இதுவரைக்கும் நான் பேசிட்டே போலாம். இன்னும் நிறைய பாயிண்ட்ஸ் அதுல.  அதெல்லாம் அப்பட்டமா அவங்க சொல்றாங்க. அமித்ஷாவே அவங்க  பாராளுமன்ற நிலைக்குழுவே ஜனாதிபதிக்கு கொடுத்திருக்கக்கூடிய பரிந்துரையில் தெரிஞ்சிரும். அப்பட்டமா இருக்கு அதுல.

இந்தி தான் தேசிய மொழி என்று அப்போது அமைச்சராக இருந்த பா சிதம்பரம் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, திராவிட முன்னேற்றக் கழகமாக  இருக்கட்டும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்கட்டும். நாங்கள் இந்தி திணிப்பை பொறுத்தவரை நேற்றும் சரி, இன்றும் சரி, அதே கொள்கையில் இருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |