கொரோனா பேரிடர் இருந்து வரும் காலங்களில் கல்வியில் மாணவர்கள் சிரமங்களை ஏற்பட்டுவிடக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகளும், கல்வி நிர்வாகமும் செய்து வருகின்றன. தமிழகத்தில் 16 ஆம் தேதி முதல் பள்ளி திறக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்காக இன்று பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கல்வி துறை சார்பாக சில முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பள்ளி பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பு, பன்னிரெண்டாம் பாடத்திட்டத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள படங்கள் , முதன்மை ( 70 % ) மற்றும் விருப்பமுள்ளவை ( 30% ) என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்