பள்ளி மாணவர்களுக்கு அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லியில் சமீப காலமாகவே காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்துக்குள் காற்றின் மாசுபாடு அதிக அளவில் அதிகரித்துள்ளது. அதன்படி காற்று தர குறியீடானது 450 ஆக இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதோடு காற்று மாசுபாட்டின் காரணமாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை தொடர் விடுமுறை வழங்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் காற்றின் மாசுபாடு ஓரளவு சரியான பிறகு தான் மாணவர்களின் விடுமுறை முடிவடையும் என்றும், அதுவரை மாணவர்களுக்கு விடுப்பு தான் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.