1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை முழுமையாக திறந்து இரண்டு மாதங்கள் பாடங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில்கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை முழுமையாக திறந்து இரண்டு மாதங்கள் பாடங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்திய நிலையில் மட்டுமே அனைத்து மாணவர்கள் பள்ளிகளில் வகுப்பறையில் அமர வைக்க முடியும். இது குறித்து சுகாதாரத் துறையின் ஒப்புதல் கேட்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.