நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜீ, நிச்சயமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவித்து வருகின்றது. மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில், இன்றைக்கு ஆலயத்தில் திருவிழாக்கள் போன்றவை எல்லாம் தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளராக ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து அந்தப் பணிகளை வேகமாக அரசு முடுக்கி விட்டுக் கொண்டு இருக்கின்றது. இது போன்ற நிலையில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இது மக்களுடைய பிரச்சினை. கோவிட் 19 என்பது இரண்டாவது அலை வந்தாலும் கூட, பல மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.
இருந்தாலும் ஆபத்தான நிலை வந்துவிடக்கூடாது என்ற நிலையில், அரசு நடவடிக்கை எடுத்தால், அதற்கு வணிகர் சங்கம் அமைப்பாக இருந்தாலும் சரி, அனைத்து வியாபாரிகள்… பொது மக்களாக… இருந்தாலும் சரி… அனைத்து தொழிற்சாலையில் இருப்பவர்கள் சரி…. அனைவரின் ஒத்துழைப்பும் இதில் இருக்க வேண்டும்.பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்.
ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் போன்ற நிலைபாட்டிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அப்படி மக்கள் ஒத்துழைக்க நேரத்தில் பொறுப்புணர்வு உள்ள வியாபார சங்கம், வணிகர் சங்கம் என அனைவரும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் நிலைப்பாடாக இருக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்தார்.