திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை முடித்து பார் என்று பழமொழி கூட உள்ளது. அந்த அளவிற்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் கஷ்டப்பட்டு அதிகளவில் பணம் செலவு பண்ணி திருமணத்தை முடிப்பார்கள். இதில் ஒரு சில திருமணங்கள் பாதியில் நின்று போவதும் உண்டு. அதற்கு காரணம் திருமண மாப்பிள்ளையோ, பெண்ணோ பிடிக்காமல் இருப்பது. இல்லையேல் வேறு யாரையாவது விரும்பினாலும் திருமணத்தை பாதியில் நிறுத்திவிட்டு செல்வது பெரும்பாலும் நாம் கேள்விப்பட்ட விஷயம்.
ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. உத்திரபிரதேசத்தின் மஹோபா என்ற பகுதியில் திருமண ஏற்பாடுகள் நடந்து முடிந்து தாலி கட்டும் சமயத்தில் மணமகனுக்கு இரண்டாம் வாய்பாடு தெரியாததை அறிந்த மணமகள் திருமணத்தை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். மேலும் அடிப்படையான இரண்டாம் வாய்ப்பாடு கூட தெரியாத நபரை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் ஆச்சர்யம் கலந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.