2ஜி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
2ஜி முறைகேடு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராஜா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து 2ஜி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணைக்கு வருகின்றன.
ஆ.ராஜா உப்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய புலனாய்வுத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதி யோகேஷ் கண்ணா அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதனால் 2ஜி வழக்கில் தொடர்புடையவர்கள் சற்று அச்சம் அடைந்துள்ளனர்.