2ஜி வழக்கு மேல்முறையீடு விசாரணை முடிந்தால் ஆ.ராசா எங்கு இருப்பார் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கிண்டலடித்துள்ளார்.
2ஜி முறைகேடு செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராஜா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து 2ஜி முறைகேடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. ஆ.ராஜா உப்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய புலனாய்வுத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் 2ஜி வழக்கில் மேல்முறையீடு விசாரணை முடிந்தால் ஆ. ராசா எங்கு இருப்பார் என்று எல்லோருக்கும் தெரியும். அவரை சிறையில் அடைத்தது காங்கிரஸ் கட்சிதான். பாஜக அல்ல என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் 2ஜி வழக்கு பற்றி கோட்டையில் என்னுடன் விவாதிக்க தயாரா என்று அழைப்பு விடுத்தது நிலையில், எடப்பாடி பழனிசாமி இதனை தெரிவித்துள்ளார்.