நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் விலங்குகள் பலவும் வாழுகின்றன. வீட்டில் வளர்க்கக்கூடிய பலவகை செல்லப்பிராணி உயிரினங்ளை மக்கள் மிகவும் பாசமாக வளர்த்து வருகிறார்கள். இவைகளை தங்கள் வீடுகளில் உள்ள மனிதர்களை போல பேணி பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் செல்லப்பிராணிகளை பாதுகாக்கும் வகையில் ஒரு நாடு வித்தியாசமான ஒரு முயற்சியை தற்போது நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.
செல்ல பிராணிகள் இறந்துவிட்டால், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என கொலம்பியா அரசு அறிவித்துள்ளது.குழந்தைகள் இல்லாத சிலர் செல்லப்பிராணிகளை தனது குழந்தைகள் போல் நினைத்து வளர்ப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.