மதுரை வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீல் இடப்பட்ட அறைகளில் இரண்டு பேர் நுழைந்ததாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மதுரையில் உள்ள நான்கு தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் இடப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மர்ம நபர்கள் இருவர் நுழைந்ததாக திமுக தரப்பு புகார் எழுப்பியது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருவரும் மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக மின்வாரிய பணியாளர்கள் என்பது தெரிய வந்தது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்புக் காணப்பட்டது.