ஜெர்மன் பெடரல் அரசாங்கம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவெடுத்துள்ளது.
ஜெர்மன் பெடரல் அரசாங்கம் இரண்டு மாதங்களுக்கு பிறகு சில கட்டுப்பாடுகள் தளர்த்துள்ளது. திங்கள் முதல் சில கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தாவரங்கள் தொடர்பான பொருட்களை விற்கும் கடைகள், புத்தகக்கடைகள், பூக்கடைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 800 சதுர அடி கொண்ட கடைகளில் 10 சதுர மீட்டருக்கு ஒரு வாடிக்கையாளர் மட்டுமே நிற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகளாக இருந்தால் கூடுதல் வாடிக்கையாளர்கள் நின்று கொள்ளலாம்.
ஜெர்மனியில் பள்ளிகளும்,முடிதிருத்தும் கடைகளும் மார்ச் முதல் திறக்கப்பட்ட நிலையில் மாகாணங்களும் இந்த இரண்டாம் கட்டுப்பாட்டையும் தளர்த்த ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் பெடரல் அரசு வெளியிடங்களில் மக்கள் சந்தித்துக் கொள்ள அனுமதியளித்துள்ளது. அருங்காட்சியங்கள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றை திறப்பது கொரோனா பரவல் நிலைமையை பொறுத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.