Categories
அரசியல் மாநில செய்திகள்

2வது பட்டியலில் பெயர் இல்லையா…? அதிர்ச்சியில் செல்லூர் ராஜு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஓரளவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓபிஎஸ்-க்கு வேட்பாளர் பட்டியலில் ஒருங்கிணைப்பாளர் முறையில் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தென் மாவட்டங்களில் கட்சி முன்னோடிகளை விட தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பன்னீர்செல்வம் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இன்று வெளியாகும் இரண்டாவது பட்டியலிலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இரண்டாவது பட்டியலில் தங்களுடைய பெயர் இடம் பெறுமா? என்று செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |