Categories
தேசிய செய்திகள்

2வது முறை மீண்டும் ஊரடங்கு அமல்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இன்னும் முழுமையாக தளர்வுகள் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதனால் பொது இடங்களில் கூட்டம் கூடுதல், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பொதுமக்கள் கொரோணா பாதுகாப்பு விதிகளை மீறுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் பலத்த ஊரடங்கு கட்டுப்பாடு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வருகின்ற திங்கட்கிழமை வரை அமலில் இருக்கும். அதுமட்டுமன்றி முக கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 300 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருமண மண்டபங்கள், கிளப்புகள் மற்றும் உணவகங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐந்து கொரோனா நோயாளி களுக்கு மேல் இருக்கும் கட்டிடங்களுக்கு கட்டாயம் சீல் வைக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |