200 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரங்கிபுரம் கிராமத்தில் இருக்கும் இருளர்புரம் கல்லாங்குத்து பகுதியில் சாராய வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் 200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் அவற்றை கீழே கொட்டி அழித்துள்ளனர். இது தொடர்பாக அருணாபுரம் கிராமத்தில் வசிக்கும் பிரபாகரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.