Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளில் பழுதான டிவி…. கடைக்காரருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிளகுமூடு காடுவெட்டி பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015- ஆம் ஆண்டு செல்லப்பன் திங்கள் சந்தை பகுதியில் இருக்கும் டிவி விற்பனை செய்யும் கடையில் 24,500 கொடுத்து எல்.இ.டி டிவியை வாங்கியுள்ளார். அப்போது கடை உரிமையாளர் 3 ஆண்டுகள் வாரண்டி இருப்பதாக கைப்பட எழுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து டிவியை பயன்படுத்திய 2 ஆண்டுகளுக்குள் ஒலி மட்டுமே கேட்டு, ஒளி தெரியாமல் போனது.

இதனால் செல்லப்பன் சம்பந்தப்பட்ட கடைக்கு டிவியை கொண்டு சென்று கேட்டுள்ளார். அப்போது டிவியை சரி செய்ய 14,000 ரூபாய் செலவாகும் என அந்த நிறுவன ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்லப்பன் வாரண்டி காலம் முடியவில்லை டிவியில் இருக்கும் பழுதை சரி செய்து தர வேண்டும் என கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளார். அப்போது கடைக்காரர் “டிவியை விற்பனை செய்ததும் எங்களது வேலை முடிந்து விட்டது” என அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் செல்லப்பன் குமரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் கடையின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி டிவியின் தொகை 24 ஆயிரத்து 500 ரூபாய், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 15 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு, வழக்கு செலவு தொகை 5,000 ரூபாய் ஆகியவற்றை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Categories

Tech |