அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலிய பறம்புவிளை பகுதியில் மது(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அடிதடி வழக்கில் போலீசார் மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை அடுத்து ஜாமீனில் வெளியே வந்த மது வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த மதுவை மார்த்தாண்டம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.