Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்…. உற்சாகத்தில் மாணவர்கள்…!!

கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து  ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு நர்சரி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. தற்பொழுது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. அதன்பின்  தற்பொழுது நீலகிரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நர்சரி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னரே பள்ளிகளுக்குள்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் எல்.கேஜி, யூ.கேஜி படிக்கும் மாணவர்களுக்கு எல்.இ.டி திரைகள் மூலமாக ஆசிரியர்கள் பாடங்களை கற்பித்துள்ளனர். ஊட்டியில் மொத்தம் 32 நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைத்து அவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.

Categories

Tech |