மதுரை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரயில் நேற்று முதல் இயங்கியது.
கொரோனா காரணமாக மதுரை – ராமேஸ்வரம் இடையே இயங்கிய பாசஞ்சர் ரயில் நிறுத்தப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்ட நிலையில் எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் பாசஞ்சர் ரயில்கள் ஒவ்வொன்றாக இயங்கி வருகிறது. அதில் மதுரை – ராமேஸ்வரம், நெல்லை – திருச்செந்தூர், செங்கோட்டை – நெல்லை இடையே எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கியது. அதில் வ.எண் 06651 என்ற எண் கொண்ட மதுரை – ராமேஸ்வரம் செல்லும் ரயில் சுமார் 2 வருடங்களுக்கு பின் நேற்று மதுரையில் இருந்து 6:30 மணிக்கு கிளம்பி காலை 10:15 ராமேஸ்வரம் ரயில் நிலையம் சென்று அடைந்தது. மறுமார்க்கத்தில் வ.எண் 06656 என்ற எண் கொண்ட ரயில் ராமேஸ்வரத்திலிருந்து மாலை 6.05 மணிக்கு கிளம்பி இரவு 9.55 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து அடைந்தது.
இந்த ரயில்கள் சிலைமான், திருப்புவனம், கீழ்மதுரை, திருப்பாச்சேத்தி, ராஜகம்பீரம், மானாமதுரை, சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், வாலாந்தரவை, ராமநாதபுரம் மண்டபம், கேம்ப் மண்டபம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் 12 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து புறப்பட்ட ரயிலுக்கு பயணிகள் சார்பில் பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் மிக்க மகிழ்ச்சியுடன் ரயிலில் பயணம் செய்தார்கள்.