திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து மகளிர் தினத்தில் பாகிஸ்தானை சேர்ந்த மணமகள் இந்தியாவை வந்தடைந்தார். இந்த சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2019ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் செய்த காலகட்டத்தில் புல்வாமா தாக்குதலும் ,அதற்கு எதிரான சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடந்து வந்தது.
இதனால் இரு நாடுகளும் பதட்டம் ஏற்பட்டது. இந்த காரணத்தினால் பாகிஸ்தானை சேர்ந்த மணப்பெண்ணை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு விசா கிடைக்கவில்லை. பின்னர் அவர்களின் வருகைக்கு ஒப்புதல் அளிக்காததால் இருவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து செய்தி தளங்களில் வெளியானது.
இதை அறிந்த மத்திய வேளாண் துறை இயக்குனர் கைலாஷ் சௌத்ரி இந்த விவகாரத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வெளியில் துறை அலுவலர்கள் சந்தித்து, அந்த பெண்ணை இந்தியா திரும்புவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மகளிர் தினத்தன்று அந்த பெண் இந்தியா திரும்பினார். இவரது வருகையை ஒட்டி அவரது குடும்பத்தினர் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். அங்கிருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.