Categories
சென்னை மாநில செய்திகள்

2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்…. நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

மாநில அரசு சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
1. மாதவரம் சிறுசேரி சிப்காட் வரை

2. மாதவரம் சோழிங்கநல்லூர் வரை

3. கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரை

இவற்றிற்கான பணிகள் சென்னையில் பல இடங்களில் நடந்து வரும் நிலையில் முதல்வர் முக. ஸ்டாலின் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து தலைமைச் செயலகத்திலிருந்து சென்ட்ரலில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம்கட்ட பணிகளையும் பார்வையிட்டார்.

மேலும் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் நிதியுதவியுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ரூபாய் 38 9.4 2 கோடியில் பிரம்மாண்டமான சதுக்கம் அமைக்கும் பணி நடைபெறுவதையும் அவர் பார்வையிட்டுள்ளார். அதன் பின்னர் அங்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் லிப்ட் அமைக்கும் பணிகள் பார்க்கிங் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் முதல்வரிடம் இங்கு 500 கார்கள், 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு வசதிகள் இருக்கிறது என்று அவரிடம் கூறியுள்ளார்.

இதேபோன்று முதல்வர் கிண்டி சென்று அங்கு கத்திபாரா மேம்பாலத்தில் கீழே நடைபெற்றுவரும் பணிகளையும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அருகே மெட்ரோ ரயில் நிலைய திட்டப் பணிகளையும், தெள்ளியகரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் என்னென்ன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். முதல்வர் முக ஸ்டாலின் மெட்ரோ ரயில் திட்ட 2 ஆம் கட்ட பணிகள் நடைபெறும் 3 இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு மேலும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |