Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

2-ஆம் சித்தியில் கருணை மழை பொழியும் காளியம்மன் கோவில் …..நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

காளியம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கள்ளப்பெரம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற இரண்டாம் சித்தியில் கருணை மழை பொழியும் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  ஆண்டு தோறும்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 7-ஆம்  தேதி முகூர்த்தக்கால் நட்டு  திருவிழா தொடங்கியது. இந்நிலையில் 9-ஆம் தேதி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், 11-ஆம் தேதி அம்மன் சக்தி கரக புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனையடுத்து அன்று  இரவு மஞ்சள் நீராட்டு விழா, தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்துள்ளனர். இந்த திருவிழாவில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு காவல்துறையினர்  பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |