Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“2 ஆயிரம் ரூபாய் கடன் தொகை” 37 ஆண்டுகளுக்கு பிறகு வந்த நோட்டீஸ்…. குழப்பத்தில் எலக்ட்ரீசியன்….!!

கடன் தொகையை திருப்பி செலுத்துமாறு 37 ஆண்டுகளுக்கு பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டியில் எலக்ட்ரீசியனான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1985-ஆம் ஆண்டு கடை வைப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் வந்த அரசுகள் கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி என அறிவித்ததால் தனது கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக சேகர் நினைத்தார்.

இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2000 ரூபாய் கடனை திருப்பி செலுத்த கோரி சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு சேகருக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதுகுறித்து சேகர் கூறும் போது, சுமார் 37 ஆண்டுகளுக்கு பிறகு கடனை திரும்ப செலுத்த கோரி நோட்டீஸ் வந்துள்ளது. கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி என்று கூறியதால் எனது கடனும் தள்ளுபடி ஆகி விட்டது என நினைத்தேன். இத்தனை ஆண்டுகள் ஏன் கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என வங்கியிலிருந்து தகவல் வரவில்லை என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |