Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

2 ஆவது அலை வேகமாக பரவுது…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. நெல்லையில் பொதுமக்கள் சலசலப்பு….!!

நெல்லையில் முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் விதித்தது.

இதற்கிடையே அதனை கடைபிடிக்காத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் காவல்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு முககவசம் அணியாத 21 நபர்களுக்கு ரூபாய் 200 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |