திருவள்ளூர்,பொன்னேரி அருகே பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.வெடி குண்டு மிரட்டலால் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் நடத்தினர். இந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் 2வது நாளாக பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மோப்பநாய் உதவியுடன் வெடுகுண்டு நிபுணர்கள் பள்ளியில் மீண்டும் சோதனை நடத்தினர் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது