Categories
மாநில செய்திகள்

2 இடங்களில் முடிந்தது… “சீக்கிரம் 3,085 கோவில்களில் கட்டப்படும்”… அமைச்சர் சேகர் பாபு!!

தமிழகத்தில் 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம், புலியூர் பாரத்வாஜேஸ்வரர் கோவிலில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு அறையை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள 3,087 கோவில்களுக்கு கண்காணிப்பு கேமரா மற்றும் களவு எச்சரிக்கை மணி பொருத்தப்பட்ட பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 309 கோடி நிதியில் திருவிடைமருதூர், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு அறை 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 22 சிலைகள் பாதுகாப்பாக வைக்கும் அளவிற்கு சென்னை கோடம்பாக்கம், புலியூர் பரத்வாஜ் ஈஸ்வரர் கோவிலில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளது. மதிப்புமிக்க சிலைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு இந்த அறைகள் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 3085 கோவில்களில் பாதுகாப்பு அறைகள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |