தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் லட்சிய திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு தர போவதில்லை என டி.ஆர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். “இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர் பலம். கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள் பக்கபலம். இரண்டு கட்சிகளுக்கு பார்த்துக் கொள்ளப் போகிறது பலப்பரீட்சை. நான் போய் என்ன செய்யப் போகிறேன் புது சிகிச்சை” என்று கூறியுள்ளார்