கோவை வடவள்ளியில் நகை வியாபாரியிடம் வழிப்பறி செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் நகை வியாபாரி சண்முகம். இவர் கடந்த 30ஆம் தேதி சத்தியமங்கலத்தில் இருந்து தங்க நகைகளை வாங்கி அதை ஹால்மார்க் நகைகளாக மாற்ற இருசக்கர வாகனத்தில் வடவள்ளி க்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2 கிலோ தங்கம் 7 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்தனர்.
புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளையடித்த அப்துல்ரஹீம், அஷ்ரப் அலி, பவானி, வெங்கடாசலம் உள்ளிட்ட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.