Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி…. இதுதான் காரணம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியில் மாரம்மாள்(35) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்து விட்டார். இவருக்கு 13 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாரம்மாள் தன் மீதும், இரண்டு குழந்தைகள் மீதும் மண்ணெனையை ஊற்றி தீகுளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினார். அதன் பிறகு அவர்கள் 3 பேர் மீது தண்ணீர் ஊற்றினர்.

இதனையடுத்து போலீசார் மாரமாலிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியது, தனது கணவருக்கு சொந்தமான ஓசூர் மத்திகிரியில் உள்ள 20 சென்ட் நிலத்தை உறவினர்கள் அபகரித்து வைத்துக்கொண்டு தன்னை சித்திரவதை செய்கிறார்கள். இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குழந்தைகளுடன் முயன்றேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்து விசாரிக்க கூறி, அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |