2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கந்த பொடிகார தெருவில் வெங்கடேசன்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நிஷாந்தி(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தியாலினி(4) என்ற மகளும், ரூபன்(2) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வரலாம் என வெங்கடேசன் தனது மனைவியை அழைத்துள்ளார் அதற்கு உடம்பு சரியில்லாததால் நான் வரவில்லை என நிஷாந்தி கூறியுள்ளார்.
இதனால் வெங்கடேசன் தனது பெற்றோருடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார். நேற்று மாலை வெங்கடேசன் தனது மனைவியை செல்போன் மூலம் அழைத்துள்ளார். ஆனால் நிஷாந்தி அழைப்பை ஏற்கவில்லை. இது குறித்து வெங்கடேசன் அக்கம் பக்கத்தில் வாசிப்பவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது நிஷாந்தி, தியாலினி, ரூபன் ஆகிய மூன்று பேரும் தனித்தனியாக தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாய் மற்றும் குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நிஷாந்தி முதுகு தண்டுவட பிரச்சனையால் அவதிப்பட்டது தெரியவந்தது. மேலும் தியாலினிக்கு மூச்சு திணறல் இருந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த நிஷாந்தி தனது குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.