அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொண்டால் தான் அரசு வேலையும், அரசின் நலத்திட்ட உதவிகளும் கிடைக்கும் என்ற மசோதா சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வங்கதேசத்திலிருந்து குடியேறியுள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கத்தை தடை செய்யும் நோக்கில் இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசுக்கு பல நிதி நெருக்கடி ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Categories