நெல்லையில் கடல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கடல் தொழிலாளியான பென்னட் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவரது குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த பென்னட் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கினை போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கூடங்குளம் காவல்துறையினர் பென்னடின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.