Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

2 கைகள் இல்லை….மிகுந்த நம்பிக்கையுடன் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி..!!!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவி ஒருவர் இரண்டு கைகள் இல்லாத நிலையிலும், மிகுந்த நம்பிக்கையில் ஆசிரியர் உதவியுடன் எழுதினார்.

தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்வு வருகின்ற 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 89 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்து 042 மாணவர்களும், 5 ஆயிரத்து 353 மாணவிகளும் 36 மையங்களில் தேர்வு எழுதினார்கள். இதில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 53 பேர் அடங்குவார்கள்.

இதில் மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் இரண்டு கைகளும் இல்லாத நிலையில் மிகுந்த நம்பிக்கையுடன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை ஆசிரியர் உதவியுடன் நேற்றுமுன்தினம் எழுதினார். அந்த மாணவியின் பெயர் லட்சுமி. வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மாணவி பதிலளிக்க ஆசிரியர் அதை எழுதினார். இந்த மாணவி பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார். அதனால் அவரை பெற்றோர்கள் பார்க்க முடியாமல் கைவிட்டார்கள்.

இதனால் அந்த மாணவி மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்ந்து படித்து வருகின்றார். இந்த மாணவி தனக்கு இரண்டு வயது இருக்கும் போது அன்பகத்திற்கு வந்துள்ளார். தனக்கு இரண்டு கைகள் இல்லாததால் பெற்றோர்கள் கைவிட்ட நிலையில் நம்பிக்கையுடன் படித்து 12 வகுப்பு தேர்வு எழுதிய அந்த மாணவியை சக மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் பாராட்டியுள்ளார்கள்.

Categories

Tech |