Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு”…. குடும்பத்துடன் கலெக்டரிடம் மனு அளித்த விவசாயி….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவ்வை நடுகுப்பத்தில் விவசாயியான இளைய முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களது குடும்பத்திற்கு சேமங்கலம் மதுரா ராமநாதபுரம் கிராமத்தில் 1 ஏக்கர் 84 சென்ட் பூர்வீக நிலம் அமைந்துள்ளது. இதில் பாகப்பிரிவினை மூலம் எனக்கு 92 சென்ட் நிலம் அளிக்கப்பட்டது.

அதே கிராமத்தில் வசிக்கும் ஒருவர் எனது நிலத்தை அபகரித்து விளைநிலங்களுக்கு செல்ல வேண்டிய தண்ணீரையும், பூமியில் அதிக அளவில் ஆழமான துளை போட்டு தண்ணீரை உறிஞ்சி வருகிறார். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே 2 கோடி ரூபாய் மதிப்புள்ள எனது நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுத்து அதனை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |