Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 டன் பருப்பு மூட்டைகளை திருடிய வழக்கு…. 4 பேர் கைது….. போலீசார் அதிரடி…..!!!

சென்னை திருவொற்றியூரில் மத்திய அரசு நிறுவனத்திற்கு சொந்தமான கான்கார்டு கன்டெய்னர் யார்டு உள்ளது. இங்கு கடந்த மே மாதம் மராட்டியத்தில் இருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகம் கொண்டுவரப்பட்ட உளுந்து பருப்பு மூட்டைகள் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டுவரப்பட்டது. அப்போது மர்ம நபர்கள் சிலர் கண்டெய்னர் யார்டில் வைக்கப்பட்டிருந்த அந்த கண்டெய்னர் பெட்டியின் சீலை உடைத்து அதில் இருந்த ரூ3 லட்சம் மதிப்புள்ள 2 டன் 3 கிலோ எடை கொண்ட உளுத்தம் பருப்பு மூட்டைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து கண்டெய்னர் யார்டு மேற்பார்வையாளர் ராம்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பருப்பு மூட்டைகளை கொள்ளையடித்த மரும நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திருவொற்றியூர் இந்திரா நகரை சேர்ந்த பர்னாபாஸ்(34), விக்னேஷ்(34), சதீஷ்(30), ஜெகநாதன்(25) ஆகியோர் தான் 2 டன் உளுந்து பருப்பை திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, பருப்பு மூட்டைகள் அனைத்தையும் விற்று அதில் கிடைத்த பணத்தை செலவு செய்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 4 பேரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |