Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 டீமும் நல்லா ஆடனும்னு நெனைப்பாங்க….. ரசிகர்களுக்கு நன்றி… கூல் கேப்டன் தோனி!!

கிரிக்கெட்டில் விளையாடும் இரு அணியினரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பவர்கள் சென்னை ரசிகர்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார் தல தோனி..

நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே  அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. மேலும் அம்பாத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, ஷர்துல் தாகூர் உள்ளிட்ட பல வீரர்கள் கலந்து கொண்டனர் .. இந்த விழாவின் போது மு.க.ஸ்டாலினுக்கு 7 என்ற பெயர் பொறித்த ஜெர்சியை வழங்கினார் மகேந்திர சிங் தோனி..

இந்த விழாவில் பேசிய எம்.எஸ் தோனி, எனது கடைசி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்னையில் தான் இருக்கும். அடுத்த ஆண்டாக இருந்தாலும், 5 ஆண்டுக்கு பிறகு இருந்தாலும் சென்னையில் தான் கடைசி ஐபிஎல் ஆடுவேன்.. வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் பல்வேறு மாநிலங்களில் கடந்து வந்துள்ளேன்.. எந்த நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடந்தாலும் சென்னை ரசிகர்கள் எங்களை ஆதரித்தனர்.. சிஎஸ்கே அணிக்கான ரசிகர் பட்டாளம் சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும் விரிவடைய வேண்டும் என்றார்..

மேலும் சென்னை மிகச்சிறந்த நினைவுகளை தனக்கு தந்துள்ளது. கிரிக்கெட் மீதான புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அதிகம். 2008ல் ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்கு என்னை தேர்வு செய்வார்கள் என நினைக்கவில்லை..சென்னையும் தமிழ்நாடும் எனக்கு அதிகமாக கற்று கொடுத்துள்ளது. கிரிக்கெட்டில் விளையாடும் இரு அணியினரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பவர்கள் சென்னை ரசிகர்கள், அதுதான் அவர்களது சிறப்பு..

தொடர்ந்து பேசிய அவர், சிஎஸ்கே சரியாக செயல்படாத போதும் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள். சிஎஸ்கே அணியை உற்சாகப்படுத்தி ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. 2 ஆண்டுகள் சிஎஸ்கே சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, அதிகம் பேசப்பட்ட அணியாக சிஎஸ்கே இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டுடன் முடியவில்லை.. தமிழ்நாட்டை தாண்டி, இந்தியாவைத் தாண்டி எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்கிறது தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி என்று  பெருமிதமாககூறினார்..

Categories

Tech |